காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உறுதியளித்துள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் வைத்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் முகுல் ரோத்தகி குற்றசாட்டு வைத்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.

தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வை இன்றே அமைப்பதாக உறுதியளித்தார். டெல்டாவில் மழை பெய்யாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் 5 லட்சம் ஏக்கரில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தண்ணீர் இன்றி பயிர் கருகுவதால் காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 28.8 TMC நீரை திறந்து விட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குண்டான 45 டிஎம்சி நீரை இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்றும், மேலும் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரை உரிய நேரத்தில் திறந்து விடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: