கலிபோர்னியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 101 ஸ்கை-டைவர்கள் உலக சாதனை..!!

அமெரிக்காவை சேர்ந்த 101 ஸ்கை-டைவர்கள் வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து உலக சாதனை படைத்துள்ளனர். உலக சாதனை செய்வதற்காக தனி குழு அமைத்து தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கை-டைவிங் அமைப்பு 101 ஸ்கை-டைவர்களை ஒரே நேரத்தில் குதிக்க வைத்து உலக சாதனை படைத்துள்ளனர். தங்களது 4-வது முயற்சியில் ஒன்றாக குதித்து 2 உலக சாதனைகளை அவர்கள் முறியடித்துள்ளனர். இதன் தனி சிறப்பே ஸ்கை-டைவர்கள் அத்தனை பேரும் 60 வயதை கடந்தவர்கள். இதற்குமுன் 75 பேர் ஒன்றாக குதித்ததே சாதனையாக இருந்தது.

The post கலிபோர்னியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 101 ஸ்கை-டைவர்கள் உலக சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: