முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி

தேவையானவை:

முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) – 2 கப்,
பனீர் துருவல் – ஒரு கப்,
கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்,
தக்காளி – 2 (விழுதாக அரைக்கவும்),
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் (கோஃப்தாவுக்கு),
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் (கிரேவிக்கு),
தக்காளி கெச்சப் – ஒரு டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி – 2 சிட்டிகை,
பூண்டு – 3 பல்,
பால் – ஒரு கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

முட்டைகோஸை நறுக்கி, உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருந்து, நன்கு பிழிந்து தண்ணீரை எடுக்கவும். பனீர், மிளகாய்த்தூள், கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, முட்டைகோசுடன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுதான் கோஃப்தா.கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி கெச்சப், மிளகாய்த்தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில் தக்காளி விழுது, அரைத்து வைத்த வெங்காயம் – பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பால் சேர்க்கவும். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். இதுதான் கிரேவி. பொரித்த கோஃப்தா நன்கு ஆறியதும், கிரேவியில் சேர்த்து பரிமாறவும்.

The post முட்டைகோஸ் கோஃப்தா கிரேவி appeared first on Dinakaran.