இதில் துல்கருக்கு மூட்டு இறுக்கம், பெருமூளை வாதம் தொடர்பான ஸ்பாஸ்டிக் பாராப்லீஜியா என்கிற பிறவி ஊனத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து முகம்மது துல்கருக்கு, டிச 28, ஜன 31 மற்றும் பிப் 6 ஆகிய மூன்று நாட்கள் மருத்துவர் ஜான் விஸ்வநாத் தலைமையிலான சிறப்பு அறுவை சிகிச்சை குழுவினர் தொடர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறுகையில், ‘இந்த தொடர் நவீன அறுவை சிகிச்சைகள் என்பது தசைநார் பரிமாற்றம், தசை சமநிலை மற்றும் மறுசீரமைப்பு முன்பாத மறுஅமைப்பு செயல்முறைகளை உள்ளடக்கியது. இத்தகைய நூதன நவீன அறுவை சிகிச்சைகள் எய்ம்ஸ், வேலூர் போன்ற நவீன உயர் மேற் சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைகளில்தான் செய்யப்பட முடியும். அதுவும் அதற்கு பல லட்ச ரூபாய்கள் செலவாகும் என்ற நிலையில் இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. தையல் பிரித்த பின் தொடர் இயல்முறை பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் சிறுவன் விரைவில் எழுந்து நடக்க ஆரம்பித்ததும் லட்ச தீவிற்கு அனுப்பி வைப்போம்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
The post பிறவியிலேயே நடக்க முடியாத சிறுவன் துள்ளி குதிக்க போறான்: ரங்கம் மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.