போச்சம்பள்ளி சந்தையில் கேரட் விலை வீழ்ச்சி

போச்சம்பள்ளி, ஏப்.18: போச்சம்பள்ளி ஞாயிறு சந்தையில் தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலே இரண்டாவது சந்தையான இங்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், ஓசூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். சொட்டு நீர் மற்றும் தண்ணீர் தெளிப்பு மூலம் கேரட் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரங்களில் ஒரு கிலோ கேரட் ரூ.40 முதல் ரூ.50வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில், டெம்போவில் பல்வேறு இடங்களில் கூவி கூவி விற்பனை செய்தனர். ஒரு கிலோ கேரட் ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது. கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், சந்தைக்கு வந்தவர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

The post போச்சம்பள்ளி சந்தையில் கேரட் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: