×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் மீது நடவடிக்கை: கடலூர் கிராமங்களில் மீன்வளத்துறை எச்சரிக்கை

கடலூர் :கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் மீன்வளத் துறையினர் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க கொண்டு செல்லப்படும் படகுகள் மற்றும் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக கடலூர் கடற்கரை கிராமங்களில் மின்வளத்துறையினர்  உதவி இயக்குனர் கொடுத்த அறிக்கையினை ஒலிபெருக்கியில் அறிவித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலின் தெற்கு அந்தமான் கடலையொட்டி  தென்கிழக்கு  வங்கக்கடல்   பகுதியில்    உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெறும் எனவும், இதனால் கடலில் மிக மோசமான வானிலை நிலவும் எனவும் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை எச்சரிக்கை  பெறப்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த     அனைத்து  வகையான   மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள்  மீன்பிடிக்க செல்லக்கூடாது என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் இன்ஜின்  ஆகியவற்றை மேடான பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைக்க  அறிவுறுத்தப்படுகிறார்கள்.  வானிலை எச்சரிக்கை  அறிவிப்பினை  மீறி கடலுக்கு  மீன்பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச்   சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் மீது நடவடிக்கை: கடலூர் கிராமங்களில் மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BANGLADESH ,Cuddalore ,Cuddalore district ,Bengal ,Dinakaran ,
× RELATED வீராணம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது...