×

பொய் குற்றச்சாட்டு கூறி இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்..!!

சென்னை: தோல்வியின் விரக்தியில் ராமதாசும், அன்புமணியும் பேசி வருவதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் பேட்டி அளித்துள்ளனர். பொய் குற்றச்சாட்டு கூறி இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு வருகிறார். எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகத் தயார் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ், அன்புமணி ஆதாயம் தேட முயற்சி

பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ராமதாஸ், அன்புமணி ஆதாயம்
தேட முயற்சிக்கின்றனர் என வசந்தம் கார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அன்புமணி பதவி விலகத் தயாரா?. குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். விஷச் சாராய விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ், அன்புமணி மீது மான நஷ்ட வழக்கு

அரசியல் ஆதாயத்துக்காக அவதூறாக பேசிய ராமதாஸ், அன்புமணி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

 

The post பொய் குற்றச்சாட்டு கூறி இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Dimuka ,Chennai ,Ramdas ,Anbumani ,Dimuka M. L. A. ,Rishivantiam M. L. A. Vasantham Karthikeyan ,Sankarapuram ,M. L. A. Udayasuriyan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்காக...