×

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் பேசிவருகிறார்.

சென்னை மாநகர வார்டுகள் அதிகரிக்கப்படும் – அமைச்சர்

சென்னை: சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது; இதில் 200 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகரில் ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக வசிக்கின்றனர். சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகப்படுத்த பணிகள் நடைபெறுகின்றன.

3,000 பணியாளர்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடக்கம்

தெருநாய்கள் குறித்து புகார்கள் வருவதால் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பறிமுதல்

சாலைகளில் கால்நடைகளை திரிய விட்டால் பறிமுதல் செய்ய நடவடிக்கை. மாடுகள் முதல் தடவை வீதிகளில் பிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம்.

மாடுகள் 3 முறை பிடிபட்டால் ஏலம் விடப்படும்

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் 3-வது முறையாக பிடிபட்டால் ஏலம் விடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மறுமுறை பிடிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாய், மூன்றாம் முறை பிடிபட்டால், பறிமுதல் செய்து ஏலம் விடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். அண்ணா நகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். சென்னையில் சோதனை அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கணிதவியல் பூங்கா ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

 

The post சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : CHENNAI RIBBON MANSION ,MINISTER ,K. N. Nehru ,Chennai ,Chennai Ribbon Mansion Complex ,Artist Centennial Festival ,Chennai Municipal ,New Mamana Hall ,
× RELATED சேலத்தில் ரூ.92 கோடி மதிப்பீட்டில்...