×

பொன்னேரி அருகே ஒரு கோடி அரசு நிலம் மீட்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட பெரிய முல்லைவாயல், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதன்படி, பொியமுல்லைவாயல் கிராமத்தில் புல எண் 139, வண்டிப்பாதை வகைப்பாடு கொண்ட மொத்த பரப்பு 0.19.00 ஏக்கரில் 0.04.00 ஏர்ஸ் நிலத்தில் வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதுகண்டறியப்பட்டது. புதுப்பாக்கம் கிராமம் புல எண் 144, வண்டிப்பாதை வகைப்பாடு கொண்ட மொத்த பரப்பு 0.07.00 ஏர்ஸில் 0.03.00 ஏர்ஸ் நிலத்தில் வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

ஞாயிறு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பி.பெருமாள், புதுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஐஸ்வர்யா லட்சுமி, பெரியமுல்லைவாயல் கிராம நிர்வாக அலுவலர் மதன்ராஜ் ஆகியோர் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேலிகள், தடுப்புகள், தடைகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலத்தை மீட்டு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

The post பொன்னேரி அருகே ஒரு கோடி அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur District ,Collector ,Prabhu Shankar ,Periya Mullaivayal ,Pudupakkam ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட...