தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற கூடாது: ஒன்றிய அரசின் கைக்கூலிகளாக ஆளுநர்கள் இருப்பதாக பிரகாஷ் காரத் விமர்சனம்

திருப்பூர்: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்காடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய பிரகாஷ் காரத் ஒன்றிய பாஜக அரசு பெரும் முதலாளிகளுக்கு உதவும் அரசாகதான் இருந்துள்ளது எனவும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி தேர்தல் பாத்திரங்கள் மூலம் மிக பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசின் கைக்கூலிகளாக உள்ள ஆளுநர்களை வைத்து மாநில அரசின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது.

மாநில அரசின் உரிமைகளை மீட்க மக்களவை தேர்தலில் பாஜகவை மக்கள் தூக்கி ஏறிய வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரகாஷ் காரத் ஒன்றிய பாஜக அரசு அமல் படுத்திய ஜி.எஸ்.டி வாரியால் சிறு,குறு தொழில் நலிவடைந்துவிட்டதாக தெரிவித்தார். அதே போல் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 83 சதவீத இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற கூடாது: ஒன்றிய அரசின் கைக்கூலிகளாக ஆளுநர்கள் இருப்பதாக பிரகாஷ் காரத் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: