பைக் அதிர்விலிருந்து மின்சாரம் தயாரிப்பு: பொறியாளர் அசத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக்கை ஸ்டார்ட் செய்து அதிலிருந்து ஏற்படும் அதிர் வலையில் இருந்து மின்சாரம் தயாரித்து மின்சாதன பொருட்களுக்கு பயன்படுத்தும் பொறியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பல வருடங்களாக வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு படிப்பை முடித்த இவர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்தார்.

அதன்படி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து அதில் ஒரு கருவி பொருத்தி அதிலிருந்து ஏற்படும் அதிர்வலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அவற்றை பேட்டரி மற்றும் மின்சாதன பொருட்களுக்கு பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்பை செயல்படுத்தி காட்டியுள்ளார். இதன் மூலம் தினந்தோறும் 6 யூனிட் மின்சாரத்தை சேமித்து மின்சாதன பொருட்களுக்கு பயன்படுத்தி வருகிறார். மேலும் மொபைல் சார்ஜ் போடவும், மின்சாதன பொருட்களாக பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவற்றை இயக்கவும் அதிர்வலையில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். சிவக்குமாரின் புதிய கண்டுபிடிப்பான பைக் அதிர்வலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post பைக் அதிர்விலிருந்து மின்சாரம் தயாரிப்பு: பொறியாளர் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: