கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 5 சாலைகளுக்கு பூமி பூஜை

கும்மிடிப்பூண்டி: முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 5 சாலைகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ..49 லட்சம் மதிப்பீட்டில் கவரப்பேட்டை தெலுங்கு காலனி சாலையும், ரூ..37 லட்சம் மதிப்பீட்டில் கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையும், ரூ..43 லட்சம் மதிப்பீட்டில் பெருவாயல் ஊராட்சி நயினாங்குப்பம் சாலையும், ரூ.. 1.8 கோடி மதிப்பீட்டில் மங்காவரம் முதல் அப்பாவரம் சாலையும், ரூ..34 லட்சம் மதிப்பீட்டில் பன்பாக்கம் காலனி சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தகுமார் பங்கேற்று அந்தந்த பகுதிகளில் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி கெஜா, திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பொறியாளர் மணிமேகலை, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த 5 சாலைகளில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரை போடப்பட உள்ள சாலை அப்பகுதி மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கை என்பதால், இந்த சாலையின் பூமி பூஜையில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

The post கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 5 சாலைகளுக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: