இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து ‘மா கங்கா நிஷாத் ராஜ் சேவா’ அறக்கட்டளையின் செயலாளர் சாம்பு சாஹ்னி கூறுகையில், “இங்குள்ள நிஷாத சமுதாயத்தைச் சேர்ந்த படகோட்டும் தொழிலாளர்களான எங்களுக்கு கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் நதியை கடந்து காட்டிற்கு செல்ல நிஷாத மன்னரான குகன் உதவி செய்துள்ளார். அந்த பாரம்பரியத்தையொட்டி, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, 22-ம் தேதி பனாரசில் உள்ள கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு இலவச படகு சவாரி வழங்கப்படும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ராஜ்காட்டில் இருந்து நிஷாத்ராஜ் காட் வரை ‘ஷோபா யாத்திரை’ (ஊர்வலம்) நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
The post அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 22-ம் தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம் என அறிவிப்பு! appeared first on Dinakaran.