குழந்தையை காப்பாற்ற தனது அக்கா தண்ணீரில் குதிப்பதை கண்ட சுகுணாவின் தங்கை அஞ்சனா என்பவரும் தண்ணீரில் குதித்தார். கால்வாயில் விழுந்த குழந்தையை அப்பகுதி வாசிகள் காப்பாற்றிய நிலையில் தாய் சுகுணா மற்றும் அவரது சகோதரி அஞ்சனா தண்ணீரில் 100 அடி தொலைவிற்கு அடித்து செல்லப்பட்ட இருவரையும் கால்வாயில் குளித்து கொண்டிருந்த பகுதி வாசிகள் மீட்டு தகவல் தெரிவித்தனர். இறந்த மாணவி அஞ்சனா நஸ்ஸிங் மாணவி என்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்க வந்த தாய் மற்றும் அவரது சகோதரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த குழந்தை: காப்பாற்ற முயன்ற இருவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
