இதையடுத்து, ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஆஸ்திரியாவிற்கு சென்றார். அந்நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரியாவின் பிரதமர் கார்ல் நெஹமரை மோடி சந்தித்து பேசினார். முன்னதாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வந்தே மாதரம் பாடலை இசையமைத்தபடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “பிரதமர் கார்ல் நெஹமரின், அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளையும் நமது விவாதங்களை எதிர்நோக்குகிறேன். மேலும் உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்று கூறினார். 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஆஸ்திரியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
The post 40 ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை.. ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி… அதிபருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!! appeared first on Dinakaran.