இதில் ஒரு குண்டு டிரம்ப்பின் வலது காதை உரசியபடி சென்றது.இதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலை முயற்சி நடந்த பட்லர் நகரில் குடியரசு கட்சியின் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், டிரம்ப் மற்றும் உலகின் மிக பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கலந்து கொண்டனர்.
டிரம்ப் பேசும்போது ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்,‘‘வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடிக்க வேண்டும். தீவிர இடது சாரியான கமலா ஹாரீசை நாடாளுமன்றத்திலும் யாரும் மதிப்பது இல்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்பட அனைத்து முனைகளிலும் அவர் தோல்வியடைந்து விட்டார்.
துணை அதிபரான அவர் அமெரிக்க எல்லைகளை திறந்து விட்டுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து 2.1 கோடி மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக புகுந்துள்ளனர். இதில் பல்வேறு நாடுகளில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள்,மன நலம் பாதித்தவர்கள், அகதிகள் என பலரை வந்துள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால் எல்லைகள் மூடப்பட்டு சட்டவிரோதமாக வந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார். எலான் மஸ்க்கும் டிரம்ப்பை ஆதரித்து பேசினார்.
The post கொலை முயற்சி நடந்த பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு appeared first on Dinakaran.