×

அசாம் அரசு பள்ளிகளில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் தடை

கவுகாத்தி: அசாம் அரசு பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டிசர்ட், லெக்கின்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை ஆளும் பாஜ அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வித்துறை விடுத்துள்ள அரசாணையில், ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளிக்கு ஜீன்ஸ், டிசர்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றுஅரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அசாம் அரசு பள்ளிகளில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் தடை appeared first on Dinakaran.

Tags : Assam government ,Guwahati ,Assam ,Dinakaran ,
× RELATED பங்குசந்தை, ஆன்லைன் வர்த்தகம், பணம்...