ஆசிய கோப்பை கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி ஆசையில் வங்கம்: தொடர் வெற்றி முனைப்பில் இந்தியா

கொழும்பு: பாகிஸ்தானில் தொடங்கி இலங்கையில் முடிய உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர்-4 சுற்று இன்றுடன் முடிகிறது. இறுதி ஆட்டத்துக்கு ஏற்கனவே 2 அணிகள் முன்னேறி விட்டன. அதில் ஒரு அணியான இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சூப்பர்-4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று மாலை தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் மட்டுமின்றி, சூப்பர்-4 சுற்றிலும் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத வலுவான அணியாக உள்ளது. கூடவே முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி லீக் சுற்றில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. இந்நிலையில் தான் ஆறுதல் வெற்றி பெறும் ஆசையுடன் வங்கதேச அணி இன்று இந்தியாவை சந்திக்கிறது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்தியா சூப்பர்-4 சுற்றை வெற்றியுடன் முடிக்க முனைப்புக் காட்டும். எனவே இன்றைய ஆட்டமும் விறுவிறுப்பாகவே இருக்கும். அதற்கு இலங்கையில் தொடரும் மழை அனுமதிக்க வேண்டும்.

The post ஆசிய கோப்பை கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி ஆசையில் வங்கம்: தொடர் வெற்றி முனைப்பில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: