ஆனால், இங்கு காலத்தின் மீது சத்தியம் செய்ததற்கும் மனிதன் நஷ்டத்தில் இருப்பதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காலத்தை வீணாக் கினால் வாழ்க்கையில் இழப்பைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. அது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் – அதாவது இந்த உலகில் மனிதன் உயிரோடு இருக்கும்போதே இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ வேண்டும். அவ்வாறு அடிபணிந்து வாழாமல் ஆயுளை வீணடித்துவிட்டால் இம்மை யிலும் நஷ்டம்தான்; மறுமையிலோ பேரிழப்பு.‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’, ‘நாளை செய்துகொள்ளலாம்’, ‘இப்போ என்ன அவசரம்’ என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலமும் நிச்சயம் தள்ளி வைத்துவிடும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்.
*முதுமைக்கு முன் இளமையையும்
*நோய்க்கு முன் உடல்நலத்தையும்
*வறுமைக்கு முன் செல்வத்தையும்
*வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும்
*மரணம் வரும்முன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.” (நூல்: மிஷ்காத்)
ஆகவே வாழ்வில் தொடர்ந்து முன்றே வேண்டுமானால் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது: ‘காலம் அழியேல்.’
– சிராஜுல்ஹஸன்
The post காலம் ஓர் அருட்கொடை! appeared first on Dinakaran.