ஆண்டிபட்டி அருகே போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: ஆண்டிபட்டி அருகே போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டமனூர் பகுதி ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஜயபானு என்பவர் கடந்த 1999ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பணிக்கு சேர்ந்த 24 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது சான்றிதழ்கள் போலி என தொடக்க கல்வி அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரது சான்றிதழ் சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. இந்நிலையில் தொடக்க கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியரை விசாரணை செய்து வருகின்றனர். 12ம் வகுப்பு சான்றிதழை போலியாக வழங்கி 24 ஆண்டுகள் அரசுப் பணியில் அவர் நீடித்தது அம்பலமாகி அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆண்டிபட்டி அருகே போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: