தமாகா வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்ட அண்ணாமலை

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி, சித்தோடு நால் ரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து நேற்று திறந்த வாகனத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,` சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை சென்றடையும். முயல், ஆமை கதையில் ஆமையே பந்தயத்தில் எப்போதும் வெல்லும்.

வேகமாக ஓடுபவர்கள் படுத்து விடுவார்கள். எனவே, ஈரோடு தொகுதியில் தாமரை, தாமரை, தாமரையை மறந்து விடாதீர்கள் எனக் கூறினார். அப்போது, நிர்வாகி ஒருவர் வேட்பாளரது சின்னம் சைக்கிள் என நினைவூட்டினர். இதனை சமாளிக்கும் வகையில், வரும் 19ம் தேதி வரையில் எல்லா சின்னமும் சைக்கிள் தான்’ என்று கூறி சமாளித்தார்.

The post தமாகா வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்ட அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: