பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: சென்னை: அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தாக்கல் செய்த பின்பு, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; அண்ணாமலை சொன்ன அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக யார் மீதும் பொய் வழக்கு போடாது. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு. சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை. நிச்சயமாக அண்ணாமலைக்கு தண்டனை பெற்று தரப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும் இவ்வாறு கூறினார்.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: