முன்னதாக விஜயவாடாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திர முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, துணை முதல்வராக நடிகர் பவன்கல்யாண் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சந்திரபாபுவின் மகன் லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜகவுக்கு ஒரு அமைச்சரும், பவன்கல்யாண் கட்சிக்கு 3 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இலாகா இன்றிரவுக்குள் அறிவிக்கப்பட உள்ளது. சந்திரபாபுநாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், பிரபல சினிமா பிரபலங்கள், விஐடி பல்கலைகழக துணைத் தலைவர் செல்வம், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.