ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்களை காணவில்லை..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்களை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள நகலாபுரத்தில் பூபதியேஸ்வர கோனா என்ற அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் இளைஞர்கள் நீராடுவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் இன்று காலை கோனா அருவிக்கு சென்றுள்ளனர். அங்கு அனைவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர்.

அப்போது தண்ணீரில் குதித்த 3 பேர் பல மணி நேரமாகியும் மேலே வராததால் உடன் சென்ற நண்பர்கள் நகலாபுரம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சத்தியவீடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினரும், நீச்சல் வீரர்களும் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக், பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை பற்றிய முழு விவரங்கள் இன்னும் சரிவர தெரியாததால் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்களை காணவில்லை..!! appeared first on Dinakaran.

Related Stories: