ஆந்திராவில் இருப்பவர்கள் தெலங்கானாவில் வாக்களித்தனர்;  4.30 லட்சம் பேரின் வாக்குரிமை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார்

திருமலை: ஆந்திராவில் இருந்து கொண்டே தெலங்கானாவில் வாக்களித்த 4.30 லட்சம் பேரின் வாக்குரிமை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலம், அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மீனாவிடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ஜோகி ரமேஷ், செல்லுபோயினா வேணுகோபால், எம்எல்சி அப்பிரெட்டி உள்ளிட்டோர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
4 லட்சத்து 30 ஆயிரத்து 264 பேர் தெலங்கானாவில் தற்போது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அவர்கள் ஆந்திராவிலும் வாக்குரிமை வைத்துள்ளனர். ஐதராபாத்தில் வாக்குரிமை வைத்துள்ள ஆந்திராவை சேர்ந்தவர்கள் தொடர்பான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் ஒருவருக்கு ஒரு இடத்தில் வாக்களிப்பதுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் கொள்கை ரீதியான முடிவு. தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதே முதல்வர் ஜெகன்மோகனின் விருப்பம். ஒரு சமூகத்தினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள் இரு மாநிலத்திலும் வாக்களித்து வருகின்றனர். எனவே, அவ்வாறு உள்ளவர்கள் வாக்குகளை ஆந்திராவில் அகற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

The post ஆந்திராவில் இருப்பவர்கள் தெலங்கானாவில் வாக்களித்தனர்;  4.30 லட்சம் பேரின் வாக்குரிமை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: