அதிமுக ஆட்சியில் ரூ.9 கோடி நஷ்டத்தில் இருந்த கைத்தறி துறை ரூ.20 கோடி லாபத்துடன் இயங்குகிறது: அமைச்சர் காந்தி பேட்டி

கோவை: அதிமுக ஆட்சியின்போது ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த கைத்தறி துறை தற்போது ரூ.20 கோடி லாபத்துடன் இயங்கி வருகிறது என அமைச்சர் காந்தி தெரிவித்தார். கோவையில் தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 வருடங்கள் முடிந்து உள்ள நிலையில், கைத்தறி துறை முன்னேற்றம் அடைந்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போது கோ ஆப்டெக்ஸ் களையிழந்து இருந்தது. அவை புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. 45 கடைகள் புனரமைக்கப்பட்டது. கடந்த ஆட்சியின்போது கைத்தறி துறை ரூ.9 கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது ரூ.20 கோடி லாபம் அடைந்து உள்ளது. ரூ.10 கோடியில் கடைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று உள்ளது. நெசவாளர் முன்னேற்றத்திற்கு தேவையான வகையிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழ்நாட்டில் மெகா டெக்ஸ்டைல் பார்க்
அமைச்சர் காந்தி கூறுகையில், ‘டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. டெக்ஸ்டைல் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழ்நாட்டில் மெகா டெக்ஸ்டைல் பார்க் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் துவக்க விழாவில் பிரதமரை அழைக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் பியூஸ்கோயல் கேட்டுக்கொண்டார். துவக்க விழாவுக்கு பிரதமரை கட்டாயம் அழைப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்’ என்று கூறினார்.

The post அதிமுக ஆட்சியில் ரூ.9 கோடி நஷ்டத்தில் இருந்த கைத்தறி துறை ரூ.20 கோடி லாபத்துடன் இயங்குகிறது: அமைச்சர் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: