அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்: ஜெயக்குமார் எச்சரிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் மதுரையில் 20ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்று (நேற்று) தலைமை கழகத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, மதுரையை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தின்படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள். ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கேட்கிறீர்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு தெரியும். ஏற்கனவே கூறியதுபோல, இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு. செல்லூர் ராஜூவாக இருந்தாலும், அடிமட்ட அதிமுக தொண்டனாக இருந்தாலும், யாராயிருந்தாலும் அவர்களை விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமையை அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்: ஜெயக்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: