முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வீடு இரண்டாம் கட்டப்பணி விரைவில் தொடங்கும்

சென்னை: முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு புதிதாக 7,469 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.176 கோடியில் முதற்கட்டமாக 3,510 வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டதில், இதுவரை 1,591 வீடுகளின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. விரைவில் 2ம் கட்டப் பணிகளும் தொடங்கும். முதல்வரின் முகவரி திட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 20.31 லட்சம் மனுக்களில், 19.69 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளன. மனுதாரர்களிடமிருந்து பின்னூட்டங்கள் பெறப்பட்டு உரிய மேல்நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அவசியமின்றி, அவர்கள் அதிகமாக அணுகும் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று, 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலம் 3.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கடைக்கோடி மக்களை தேடிச்சென்று தேவையான அரசு சேவைகளை உடனுக்குடன் வழங்கிட இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வீடு இரண்டாம் கட்டப்பணி விரைவில் தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: