இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 63 கிலோவாட், 100 கிலோவாட், 250கிலோவாட், 500 கிலோவாட் திறன்கொண்ட 4.07 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. மின் வாரியத்தின் மின்இழப்பு 13 சதவீதமாக உள்ளது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 4 கிலோவாட், 10 கிலோவாட் என குறைந்த திறன்கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதை பின்பற்றி, தமிழகத்தில் 16 கிலோ வாட், 25 கிலோவாட் என குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்மாற்றிகளின் திறனை குறைப்பதால், மின்இழப்பு 10 சதவீதமாக குறையும். தற்போது 500 கிலோவாட் மின்மாற்றியை நிறுவ ரூ.4லட்சம் வரை செலவாகிறது. குறைந்த திறன் மின்மாற்றிகளை நிறுவுவதால் செலவும் மிச்சமாகும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post விவசாய இணைப்புகளில் மின் இழப்பை தடுக்க குறைந்த திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவ முடிவு: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.