சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றசாட்டு

ஜெய்ப்பூர்: சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரியங்கா கந்தி ராஜஸ்தானில் 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 8 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

ஆனால் மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவால் அதன் சாதனைகளை பற்றி பேசமுடியவில்லை என குற்றம் சாட்டினார். ஜாதி, மதத்தை மட்டுமே வைத்து பாஜக வாக்கு கேட்பதாகவும், காங்கிரஸ் தனது சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

ராஜஸ்தானின் அனுகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தேர்தல் பரப்புரைக்காக செல்லும் இடங்களில் தனது கடந்த காலங்களில் பேசியவை குறித்து பிரதமர் பேச மறுப்பதாக தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்பதாகவும், 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவக்குவதாக முன்பு பிரதமர் பேசியதாக கூறிய கார்கே அவையெள்ளாம் நடதுள்ளதா என கேள்வியெழுப்பினார்.

The post சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Related Stories: