×

மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி

ஓமலூர், டிச.3: சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் மறைவுக்கு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி  துணை அமைப்பாளராக இருந்த இவரது தந்தை மாணிக்கம். இவர் அண்ணா மற்றும் கருணாநிதி, வீராபாண்டி ஆறுமுகத்துடன் திமுகவில் பணியாற்றியவர். இந்நிலையில், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓமலூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், செல்வகுமாரன், ரமேஷ், காடையாம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன், தாரமங்கலம் ராஜ ஐயப்பன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சம்பு சண்முகம், ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ரவிக்குமார், ரமேஷ், உலகு, உமாராணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போத்தன், செல்வம், பெருமாள், சங்கர், ஜெயவேல், காமாண்டப்பட்டி மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி தனசேகரன், துரைசாமி, சிவஞானவேல், அருள்பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவர், கண்ணன், சென்னிமலை, முத்துகுமார், பொட்டியபுரம் செல்வமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பிரகாஷ், பல்பாக்கி செந்தில்குமரன், கோவிந்தசாமி, சக்திவேல், சந்தோஷ், மணி, பிரபு, குயில், ஓமலூர் நகர நிர்வாகிகள் தேவராஜன், கார்த்திகேயன், ஜெமினி, ராமு, பழனியம்மாள் சரவணன், லியாகத்அலி, சரளாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Tags : Administrators ,death ,Central District ,DMK Youth Organizer Mathivanan ,
× RELATED ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு