உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் துவக்கம்

மதுரை, டிச. 3: வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசின் சிறப்பு திட்டமான ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்’ தற்போது, மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, உதவி வேளாண் அலுவலர்கள் மூலம் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள், செயல்விளக்கங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் உதவி இயக்குனர்கள் தலைமையில் விஞ்ஞானிகள், அலுவலர்கள், துணை அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிராம பஞ்சாயத்தில் விவசாயிகளிடம் தொழில்நுட்ப பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலர் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று பணிபுரிவார். வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் மாதம் ஒருமுறை கிராம பஞ்சாயத்துகளுக்கு சென்று ஆலோசனை வழங்குவர்.

Related Stories: