ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

ஓசூர், நவ.30:ஓசூரில் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, நேற்று காலை ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நடப்பாண்டு மலை கோயிலில் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

இதையொட்டி சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு, கோயில் வளாகத்தில் சொக்கப்பானை கொளுத்தப்பட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்தும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே, சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஓசூரை சுற்றி உள்ள சிவன் கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் வண்ண கோலங்கள் இட்டு அகல்விளக்குகளை பெண்கள் ஏற்றி வழிபட்டனர்.

Related Stories: