பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்

பட்டிவீரன்பட்டி, நவ. 27: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் தாமரைகுளம், கருங்குளங்களின் நீரை கொண்டு பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, நெல்லூர், ரெங்கராஜபுரம்காலனி, அய்யம்பாளையம் கால்பரவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் நடவு பணிக்காக வயல்களில் உழும் பணியும் நடக்கிறது.

இப்பகுதியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை ஏக்கர் நிலங்கள் இருந்தும் இதில் பாதியளவு மட்டுமே நெல் நாற்றுகள் பயிரிடும் பணிகள் துவங்கியுள்ளன. இப்பகுதியில் தற்போது இப்பகுதியில் கோ 51, கோ 43, ஏடிடி 45 ஆகிய 3 நெல் ரகங்கள் பயிடப்பட்டுள்ளனர். இதில் கோ 51, கோ 43 ஆகிய நெல் ரகங்கள் 120 நாட்களில் விளையும், ஏடிடி 45 ரகம் 160 நாட்களில் விளையும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லூரை சேர்ந்த விவசாயி வடிவேல் கூறியதாவது: இந்த ஆண்டு நெல் நடவு பணிகள் தாமதமாக துவங்கியுள்ளது. இப்பணிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் வரை செலவாகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கும்பட்சத்தில் நெல் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: