₹50 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் சங்கராபரணி ஆற்றில் கொட்டி அழிப்பு

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட சோதனைச்சாவடியான ஞானோதயம் சோதனைச்சாவடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரியில் 573 கேன்களில் கடத்தி செல்லப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ஆயிரத்து 50 லிட்டர் எரி சாராயம் வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில் மத்திய பிரதேசத்திலிருந்து முகமது இக்ராம் என்பவர் டாரஸ் லாரியில் எரி சாராயத்தை புதுச்சேரி மாநிலத்துக்கு கடத்தியது தெரியவந்தது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆண்டியார்பாளையம் ராஜா, லாஸ்பேட்டை சாமிதுரை, மனோ, முகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள எரி சாராயத்தை செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மற்றும் மேல்மலையனூர் வட்டாட்சியர் நெகருனிசா, செஞ்சி காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், வளத்தி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் செஞ்சி சங்கராபரணி ஆற்றில் எரி சாராயத்தை கொட்டி தீ வைத்து எரித்தனர்….

The post ₹50 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் சங்கராபரணி ஆற்றில் கொட்டி அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: