மருத்துவம் படிக்க கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.21:மருத்துவக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அண் ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூரில் மார்க்.கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களு க்கு 7.5 சதவீத உள்ஒதுக் கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தியு ம், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அண் ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூரில் நேற்று காலை மார்க்.கம்யூ கட்சியி னர் புதுபஸ்டாண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்.கம்யூ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழுவைச் சேர்ந்த சண்முகம், செல்லதுரை, முருகேசன், மல்லீஸ்குமார், வரதராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: