நாங்குநேரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

நாங்குநேரி, அக். 1:  நாங்குநேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.  நாங்குநேரியை சேர்ந்த சத்துணவு உதவியாளர் சரவணன் மனைவி லட்சுமி (35). கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் பைக்கில் செல்லும் போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், சிங்கநேரி பகுதியில் லட்சுமி கழுத்தில் கிடந்த பித்தளை தாலிச்செயினை பறித்தனர். அப்போது பைக்கில் இருந்துதவறி விழுந்த லட்சுமி காயமடைந்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் மார்கரெட் தெரசா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.  இதேபோல் நாங்குநேரி சன்னதி தெருவில் அதிகாலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரிடமும் பித்தளை செயின் பறிப்பு நடந்தது. அவர் புகார் அளிக்கவில்லை.

மேலும் களக்காடு பகுதியில் அமமுக பிரமுகர் ஒருவரது தாயாரிடம் 7 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றனர் இதுகுறித்து களக்காடு போலீசார் விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (24) மற்றும் தூத்துக்குடி சகாயபுரத்தைச் சேர்ந்த டொமினிக் அந்தோணி மகன் மரியஅந்தோணி (25) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: