தைலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மிகாவேல் ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத்,அக்.1: தைலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எஸ்.ஜ. மிகாவேல் ஆலயத்தை பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார்.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் பிள்ளையன்மனை சேகரம் தைலாபுரத்தில் சி.எஸ்.ஜ. மிகாவேல் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மறு பிரதிஷ்டை பண்டிகை விழா நடந்தது. தூத்துக்குடி- -நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். சேகர குருவானவர் ஆல்வின் ரஞ்சித்குமார் வரவேற்றார். அதை தொடர்ந்து பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னர் ஜக்கிய விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு ஆண்ட்ரூ விக்டர், குருவானவர்கள் ஜெரேமியா, கிறிஸ்டியன் தேவராஜ், பிள்ளையன்மனை சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபைமக்கள் கலந்து கொண்டனர்.

 பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு மறுநாள் ஆலய வளாகத்தில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை சேகர குருவானவர் ஆல்வின் ரஞ்சித்குமார், சபை ஊழியர் ஜசக் கிறிஸ்டோபர், சேகர சபை ஊழியர் ஆமோஸ் டைட்டஸ், சேகர கமிட்டி உறுப்பினர்கள் கிருபாநிதி, ஜஸ்டின், ஆலய பணிவிடையாளர் ஜோன்ஸ் பாக்கியராஜ், ஆலய கோபுர கட்டுமானபணி பொருளாளர் ஜோசப் குணம் மற்றும் தைலாபுரம் சபை மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: