×

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

ஓசூர், அக்.1: ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணித்த வியாபாரி குடும்பத்தினர் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஓசூர் ஆவலப்பள்ளி அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் லியாகத்அலிகான். பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் பாஷா என்பவர், நேற்று முன்தினம் இரவு, லியாகத் அலிகானின் குடும்பத்தினரை ஓசூர் அரசனட்டிக்கு பொருட்கள் வாங்க காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு, அனைவரும் காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர். அப்போது, எதிர்பாராத விதமாக காரின் இன்ஜினிலிருந்து புகை வந்து தீப்பற்றியது. இதையடுத்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக காரிலிருந்து கீழே இறங்கி, உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த ஓசூர் தீயணைப்புத்துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் காரில் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : highway ,
× RELATED கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்