புதிய மின் இணைப்பு வழங்குவதில் குளறுபடி

திருப்பூர், செப்.26: திருப்பூரில் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் குளறுபடி உள்ளதாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) அமைப்புசாரா கட்டுமான சங்க செயலாளர் சரவணன் முதலமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:புதிதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் கட்டுமான பணி நிறைவு சான்று பெறுவதை மின்வாரியம் திடீரென கட்டாயமாக்கி உள்ளது. இதனால், திருப்பூர் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்பட பல கட்டிடங்களுக்கு கடந்த 3 மாதங்களாக மின்சார இணைப்பு வழங்காமல் உள்ளது. இதனால், பல கட்டிடங்கள் இருளில் மூழ்கி உள்ளது. திருப்பூர் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்கத்தின்கீழ் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களும் கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டியது கட்டாயமாகும் என்ற விதி தற்போது மின் வாரியத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், டிடிசிபியின் கீழ் கட்டப்படும் கட்டிடங்களில் பணிநிறைவு பெற்ற பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தி கட்டுமான பணி நிறைவு சான்றிதழ் அளிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கட்டுமான பணி நிறைவு சான்று அளிப்பது சம்பந்தமான குளறுபடிகளை சரி செய்து நிரந்தர தீர்வு காணவேண்டும். தற்போது, மின்சார இணைப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Related Stories: