செஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு

செஞ்சி, மார்ச் 19: செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட தனி அறையை பார்வையிட்டார். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் நோயாளிகளிடம் வழங்கி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் பாதுகாப்பு மருந்துகள் போதிய அளவு உள்ளதா என கேட்டறிந்தார்.

Advertising
Advertising

மேலும் டாக்டர்கள், செவிலியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை கூறினார். அப்போது செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், மாவட்ட துணை இயக்குனர் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி, பிரசாந்த், சுகாதார திட்ட அலுவலர் பிரகாஷ், செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, சுப்பிரமணி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர். இதேபோன்று ஆரம்ப சுகாதார மையத்திலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தனி வார்டு அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு உடனே ஏற்பாடு செய்து தனி அறை ஒதுக்க வேண்டும் என கூறினார். பின்னர் வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார மையத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories: