கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரியில் வரும் 18ம் தேதி மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்களுக்கான ஹாக்கி தொடர் போட்டிகள், வரும் 18ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் அனைத்து வயது பிரிவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம்.