கடையம், மார்ச் 13: கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோயில் அருகே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், மாவட்ட மாணவரணி முருகேசன், ஆழ்வை நகர செயலாளர் சங்கர், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் முருகன், ராமதுரை, மகாலிங்கம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.