மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.80 லட்சம் காணிக்கை

மேல்மலையனூர், மார்ச் 12: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் மாதந்தோறும் இந்த கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மாசி மாத பெருவிழா நடந்தது. இதில் அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் காணிக்கையாக 80 லட்சத்து 80 ஆயிரத்து 777 ரூபாயும், தங்கம் 455 கிராமும், வெள்ளி 1010 கிராம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.உண்டியல் எண்ணிகையின்போது இந்து சமய அறநிலைய துணை ஆணையர் ராமு,  மற்றும் அறங்காவலர்கள் உடன் இருந்தனர்.உண்டியல் எண்ணிக்கையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: