ஆயக்காரன்புலத்தில் உலக நன்மை வேண்டி லட்சார்ச்சனை வழிபாடு

வேதாரண்யம், மார்ச் 11: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலிதீர்த்த அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அய்யனார், கருப்பண்ணசாமி, தூண்டிக்காரன் சுவாமிகள் உள்ளன.இக்கோயிலில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வந்து வேண்டி சென்றால் திருமணமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உலக நன்மை வேண்டி லட்சார்ச்சனை நடைபெறும். இந்த ஆண்டு நேற்று 18ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பருவமழை தவறாது பெய்யவும், கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்கள் நலம்பெற வேண்டியும் மூன்று நாட்கள் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். லட்சார்ச்சனையையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் அலங்கரிககப்பட்டு மூன்று நாட்களும் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

லட்சார்ச்சனை நிறைவுநாளான நேற்று விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயிலின் சார்பாக லட்டு உள்ளிட்ட பிராசாத பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் நிர்வாகமும் கிராம கமிட்டியும் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் கிரிதரன், அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான், கோயில் அறங்காவலர் குழுதலைவர் அரிகருஷ்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: