சாலை தடுப்பு சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 11: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் இருந்து நகர் டோல்கேட் வரையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு கட்டைகளில் அடிக்கடி அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் திருமணம், இதர நிகழ்ச்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனை தடுக்க அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்தும் இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்

தினால் தற்போது தடுப்பு சுவர்களில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண படங்கள் வரையப்பட்டு வருகிறது. நகர் டோல்கேட்டில் இருந்து துவங்கப்பட்ட இந்த பணி முக்கிய இடங்கள் மற்றும் வளைவுகள், பொதுமக்கள் அதிக செல்லக்கூடிய இடங்களில் ஹெல்மெட் அணிவதின் அவசியம், விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய படங்கள் வரையப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இந்த பணிகளை பாராட்டி உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், காவல்நிலையம் பகுதியில் உள்ள சுவர்களிலும் அரசு அதிகாரிகள் மூலம் இதுபோன்ற வண்ண ஓவியங்கள் வரைந்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Related Stories: