வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

வேதாரண்யம், மார்ச் 6: வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக் கழக முதல்வர் முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கருப்பம்புலம் ஊராட்சியில் மார்ச் 2ம் தேதி முதல் ஒரு வார காலம் சேவை திட்ட முகாமில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தனசேகரன், மருத்துவர்கள் நிலவழகி, சந்திரமௌலி, பழனிவேந்தன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். திட்ட அலுவலர் ராஜா, கல்லூரி துணை முதல்வர் பிரபாகரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: