சிவகங்கை, மார்ச். 4: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்விற்கான (என்எம்எம்எஸ்) தற்காலிக விடைக்குறியீடு இன்று (மார்ச் 4) வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 15.12.2019ல் நடந்து முடிந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்விற்கான தற்காலிக விடைக்குறியீடு இன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.