திருத்தங்கல் இ-சேவை மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு

 

சிவகாசி, ஜூன் 14: சிவகாசியில் தாசில்தார் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், திருத்தங்கல் மாநகராட்சி மண்டல அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த இ-சேவை மையங்களில் பிறப்பு சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ்,வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருத்தங்கல் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் சிவகாசி தாசில்தார் வடிவேல் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்காக பதிவு செய்யவரும் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான விவரம் அறியாத நபா்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான சரியான தகவல்களை வழங்கிட வேண்டும். தாமதம் இல்லாமல் சான்றிதழ் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள பணியாளர்களிடம் தாசில்தார் வடிவேல் அறிவுறுத்தினார்.

The post திருத்தங்கல் இ-சேவை மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: