மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு சங்கம் தொடக்கம்

கூடலூர், மார்ச். 4: கம்பம்  ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு சங்க துவக்கவிழா’ நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச்செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் பாபி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரேணுகா வாழ்த்துரை வழங்கினார்.

கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் புஷ்பராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். உத்தமபாளையம் முத்து விக்னேஷ், முகம்மதுகான் செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினர். கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புதுமையான உலகினைத் தங்கள் திறனால் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி ஷீமாரபியா நன்றி கூறினார்.

Related Stories: